மனிதனின் அடிப்படையான தேவை
மகராஜி தனது சிறு பிராயத்திலிருந்தே அமைதிக்கான செய்தியைப் பற்றி மக்களிடம் உரையாற்றி வருவதுடன், தனது 13-வது வயதிலேயே உலகைச்சுற்றிப் பிரயாணம் செய்யத் தொடங்கினார். அன்றிலிருந்து அவர் கடந்த நாற்பது வருடங்களாக உலகைச் சுற்றியுள்ள சுமார் ஆரறைகோடிக்கும் மேற்பட்ட மக்களிடம் உரையாற்றி உள்ளார். அவருடைய உரைகளை மலேசியா உட்பட 88 ற்கும் மேற்பட்ட நாடுகளில் பல்வேறு சாதனங்களின் வாயிலாகப் பெற்றுக்கொள்ளலாம்.
உள் அமைதியை பற்றி அவர் உரையாற்றி வந்தாலும் இயற்கையினால் ஏற்படும் பேரழிவுகளினால் வேதனைப்படும் மக்களின் அடிப்படை தேவைகளை அவர் உணராமல் இல்லை. பிரேம் ராவத் ஸ்தாபனம், மகராஜியின் செய்தியை உலக முழுவதும் பரப்புவதை முன்னிட்டு பலமொழிகளில் சாதனங்களை வெளியீடு செய்துவருவதோடு மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் முன்னனி வகிக்கின்றது.
உதாரணத்திற்கு 2005ஆம் ஆண்டு பிரேம் ராவத் ஸ்தாபனம் உலகிலேயே மிகப் பெரிய மனிதாபிமான நிறுவனமான ஐக்கிய நாட்டின் உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து நைகர், இந்தோனிசியா, கௌதமாலா, இலங்கை, போன்ற நாடுகளில் பட்டினியால் வாடியவர்களுக்கு உணவு வழங்கியுள்ளது. அத்துடன் பாகிஸ்தானில் நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஐக்கிய அமெரிக்காவில் கத்தரினா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்; சூனாமி பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கும் நிதி உதவி வழங்கியது.
பிரேம் ராவத் ஸ்தாபனம் உங்களின் உள் அமைதியைப் பற்றிய செய்தியைப் பரப்புகின்றதா அல்லது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்கிறதா?
என் செய்தி புதுமையானதோ பழமையானதோ அல்ல. இது காலவரம்பற்றது. மக்கள் தேடும் அமைதியும் மனநிறைவும் அவர்கள் உள்ளேயே இருக்கிறது. இது வெரும் சொற்கள் மட்டுமல்ல. நான் மக்களுக்கு ஞானவழிமுறையை வழங்குகிறேன். ஞானவழிமுறை என்பது ஏற்கனவே அவர்கள் உள்ளிருக்கும் அமைதியை உணர்வதற்கான ஒரு செயல்முறை வழியாகும். நான் மக்களுக்கு இந்த சாத்தியத்தை வழங்க விரும்புகிறேன். அவர்கள் இதை தொடர விரும்பினால் என்னால் முடிந்த உதவியை செய்ய விரும்புகிறேன். பிரேம் ராவத் ஸ்தாபனம் இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
தங்கள் வாழ்வில் உள் அமைதியை அனுபவித்து இன்புற வேண்டுமென விரும்பும் அனைவருக்கும் இச்செய்தி சென்றடைய பிரேம் ராவத் ஸ்தாபனம் பெரும் ஆதரவை வழங்கி வருகிறது.
அதோடு அண்மைய காலத்தில் ஐக்கிய அமெரிக்காவில் பயங்கரமான பேரழிவு ஒன்று ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில் இவ்வாறான பேரிடர்களைப் பற்றிய விவரங்களை சுலபமாக நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.. பிரேம் ராவத் ஸ்தாபனத்துடன் நான் தொலைபேசியின் வாயிலாக தொடர்புகொண்டு நம்மால் இயன்ற உதவிகளை வழங்குமாறு கூறினேன்.
உணவு மற்றும் தண்ணீருக்கான தேவையைப்போன்று, அமைதியை உணர வேண்டும் என்ற தேவையும் அடிப்படையான ஒன்று என நீங்கள் கூறுகிறீர்களா?
அமைதியை உணர வேண்டும் என்ற தேவை எல்லாத் தடைகளையும் கடந்து செல்கிறது. சிறையில் இருப்பவனுக்கும் இந்த தேவை உள்ளது. பெரிய மாளிகையில் வாழ்பவனுக்கும் பட்டினியால் வாடுபவர்களுக்கும் அமைதியை உணர வேண்டும் என்ற தேவையுள்ளது. ஏனெனில் அவர்கள் உணவை உண்டபின்பும் அமைதியை அனுபவிப்பதற்கான தேவை தொடர்ந்து அவர்கள் உள்ளேயே இருக்கும்.
நீங்கள் எனக்காக அமைதியை உணருங்கள் என்று ஒருவராலும் கூறமுடியாது. அது எப்படி இருக்குமென்றால் நீங்கள் “எனக்காக நீர் அருந்துங்கள், எனக்காக உணவை உட்கொள்ளுங்கள், எனக்காக உறங்குங்கள்,” என்று சொல்வதைப் போன்று இருக்கும். ஆகவே அமைதியை உணர்வது நமது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவையாகும்.
நீங்கள் கூறுவது எந்த அளவுக்கு முக்கியமானது?
நாம் உயிரோடு இருக்கிறோம். ஆனால் உயிருடன் இருப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் உணர்வதில்லை. எப்பொழுது உங்களிடம் ஒரு பொருள் அதிகளவில் உள்ளதோ நீங்கள் அதன் மதிப்பை உணர்வதில்லை. அது உங்களிடம் இருந்து எடுக்கப்படும் பொழுது திடீரென உங்களுக்கு ஞானோதயம் பிறக்கும். இந்த உயிர் எவ்வளவு பெறுமதிப்பு வாய்ந்தது. ஒவ்வொரு நாளும் நிறைவுடன் வாழ்வது எவ்வளவு முக்கியமானது, நமது வாழ்வில் அமைதியை உணர்வதும் அடிப்படை தேவைகளை அடையாளம் கண்டுகொள்வதும் எவ்வளவு முக்கியமானது.
நான் இங்கே எதையும் விற்பனை செய்யவில்லை. நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கும் ஒன்றை உங்களுக்கு ஞாபகப்படுத்தவே இங்கு வந்துள்ளேன். உங்கள் வாழ்வில் அமைதி வேண்டுமென்றால் உங்களிடமிருந்தே ஏன் அதை தேடத் தொடங்கக் கூடாது? உங்கள் உள்ளம் உங்களிடம் கூற விரும்புவதை ஏன் புரிந்துகொள்ளக் கூடாது? உங்கள் வாழ்வில் அமைதியை உணர்ந்து நிறைவுடன் வாழ்வதற்கு எது தேவையோ அதை செய்யுங்கள். அமைதியைத் தேடி அதை கண்டு கொள்ளுங்கள். அதை அனுபவியுங்கள். உங்களால் இயலாவிட்டால் என்னால் உங்களுக்கு உதவ முடியும்.
தரை இறக்கல்: PDF